உசிலம்பட்டயில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

இதில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ. மகேந்திரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

புரட்சி தலைவி அம்மா நினைவு நாளில் இதே நாளில் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடியார் தலைமையில் நாம் அனைவரும் நினைவு நாளை கொண்டாடுவோம் என சூளூரைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
Previous Post Next Post