மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் ஓர் ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட சூழலில், இந்த கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாபட்டி அரசு பள்ளிக்கு வந்து செல்ல மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.,
இது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் தொடர் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்.,
ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் இன்று பள்ளிக்கு செல்லாமல் பள்ளியை புறக்கணித்து விட்டு தங்கள் பெற்றோருடன் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து பணிமனை மேலாளர் தினேஷ், போராட்டம் நடத்திய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மேல் அதிகாரிகளின் அனுமதி பெற்று பாப்பாபட்டி வரை செல்லும் பேருந்துகளை மின்னாம்பட்டி வரை நீட்டிப்பு செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறிய சூழலில்., பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாணவ மாணவிகள் போக்குவரத்து பணிமனை முன்பு அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.,
பள்ளி செல்ல பேருந்து வசதி வேண்டி பள்ளியை புறக்கணித்து மாணவ மாணவிகள் போக்குவரத்து பணிமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,