ஆற்காட்டில் அம்பேத்கரின் 69 வது நினைவு தினம் – லோக் ஜனசக்தி கட்சியினர் மரியாதை


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சமூக நீதியின் முன்னோடி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி வசந்தி தலைமையேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார். அவருடன் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர்புஷ்பலதா, பொதுச் செயலாளர் மலர், செயலாளர் சாந்தி, பொருளாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர் கோபி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். பின்னர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் சி. முனுசாமி, அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, மாவட்டத் துணைத் தலைவர்கள் சந்திரசேகர், குமார், ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமமூர்த்தி, பாபு, மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், காசிநாதன், தொழிலாளர் அணி தலைவர் பொன் முருகேசன், விவசாய அணி செயலாலர் தேவராஜ் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

கட்சி நிர்வாகிகளான வரதன், சுரேஷ், ராணி, ரேகா, ஜமுனா, மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்வை சிறப்பித்தனர். நினைவு தினத்தை முன்னிட்டு அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவில் கோபால் நன்றி தெரிவித்தார்.
Previous Post Next Post