திருவாரூர் அருகே விக்கிரபாண்டியம் அருகே காரியமங்களம் பகுதியில் மத்திய அரசின் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவன எண்ணை கிணறு உள்ளது. இதற்கு எதிராக கடந்த 2015 ஜூலை 16ம் தேதி நடந்த போராட்டத்தில் அங்கிருந்த தளவாட மற்றும் நிறுவன பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் ஒப்பந்தரர் வாஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன், அன்றைய ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார்குடி நீதித்துறை நடுவர் எண் இரண்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் விசாரணை காலத்தில் இருவர் இறந்து விட்டனர். இந்நிலையில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இறுதி விசாரணை திருவாரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பு வழங்கினார். இதில், 18 பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, பிஆர் பாண்டியனுக்கு 13 வருடம் சிறைதண்டனை, ரூ 13 ஆயிரம் அபராதம், செல்வராஜூக்கு 13 வருடம் சிறைத்தண்டனை, ரூ.13 ஆயிரத்து 500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். மகிளா விரைவு நீதிமன்றத்தில் விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட இருவருக்கு தலா 13 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரியமங்கலம் ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி .ஆர் பாண்டியன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருவருக்கும் 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு...
தமிழர் களம் மாத இதழ்
0