உசிலம்பட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,*



காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது 79வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்., நாட்டின் பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி தலைவர் சரவணன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,

முன்னதாக சோனியா காந்தி வாழ்க வாழ்க என்றும், வந்தே மாதரம் என கோசம் எழுப்பினர்., இந்நிகழ்வில்  உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.,
Previous Post Next Post