காவேரிப்பாக்கத்தில் தவெ க கட்சியின் பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்...
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் எனது பூத் என்ற தலைப்பில் பூத் நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பூத் நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் பணி செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நகர செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். நகர இணை செயலாளர் பெருமாள், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் ஏழுமலை, அசோக், பாஸ்கர், உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அதன் பின்னர் அம்பேத்கரின் 69ஆவது நினைவு தினத்தையொட்டி காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.