இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை மற்றும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69 வது நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விசிக கட்சியின் சார்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 69 வது நினைவு நாளையொட்டி அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் விசிக, மக்கள் அதிகாரம், தமிழ்ப் புலிகள் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.