ஆற்காட்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 38-ஆவது நினைவு நாள் அனுசரிப்பு


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரும் புரட்சித் தலைவருமான எம்.ஜி.ஆரின் 38-ஆவது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். ஆற்காடு நகர கழகச் செயலாளர் ஜிம்சங்கர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ருத்ரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர். சீனிவாசன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவர் எம்ஜிஆருக்கு அஞ்சலியாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில்
அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனி கே. சேகர்,
ஆர். ராஜா, கிருஷ்ணசாமி, பிச்சை முத்து, புருஷோத்தமன், மனோன்மணி, ஆக்கோ. அண்ணாமலை, பீட்டர் ராஜ், ஜூலியஸ் மேரி, என். சுந்தர் உள்ளிட்ட நகரக் கழக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டு, எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Previous Post Next Post