தமிழகம் வெற்றிக்கழகம் சார்பில் ராணிப்பேட்டையில் SIR வாக்காளர் சீராய்வுக்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ள “SIR” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு நடவடிக்கை பரவலான சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து ராணிப்பேட்டையில் டி.வி.கே தமிழகம் வெற்றிக்கழகம் சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர்  வாலாஜா பூக்கடை மோகன்  தலைமை தாங்கினார் கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என  திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் “SIR நடவடிக்கை பெயரில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்களின் பெயர்களை தவறாக நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளையே பாதிக்கக்கூடிய ஆபத்தான செயலாகும். 
மக்கள் வாக்குரிமையை குறைக்கும் நோக்கத்துடனான இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் எதிர்க்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தினர்.

மேலும், மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி, உடனடியாக SIR செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டம் முழுவதும் “SIR நடவடிக்கை திரும்பப் பெறுக!”, “ஜனநாயகத்தை காப்போம்!”, “வாக்குரிமை எங்கள் உரிமை!” போன்ற கோஷங்கள் முழங்கின.

தமிழகம் வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், உள்ளூர் பகுதிகளில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பொதுமக்களும் ஆதரவாளர்களும் அதிக அளவில் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால், இந்த போராட்டம் அந்த பகுதியில்  குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
Previous Post Next Post