ராணிப்பேட்டை மாவட்டம்
முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த விசாரணை ஆவணங்களை சிபிஐ இடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 45 நாட்களுக்கும் மேலாகும் நிலையில் தமிழக அரசு கொலை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் ஆவணங்களை சிபிஐ ஏடும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை ஜாமினில் வெளிய விடும் வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை குறித்த வழக்கு ஆவணங்களை நீதிமன்றங்களின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐயிடம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மேலும் இந்த கொலை வழக்கை நீற்று போகும் வகையில் திசை திருப்ப திமுக தொடர்ந்து முயற்சி செய்தால் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை செய்துள்ளனர்