ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சா. மா. சேட் டு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினேஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு முக்கியமான வளர்ச்சி தொடர்பான விவரங்களை விளக்கினார்.
ஊராட்சி செயலாளர் காந்தி, வார்டு உறுப்பினர்கள், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் மற்றும் ஊரின் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு பொதுப்பணிகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கிராமத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது