தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே இரட்டை வாய்க்காலில் மீண்டும் புதியதாக திறக்க உள்ள தனியார் மதுபான சாராய கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய நிர்வாக கூட்டம் 06.10.2025 இன்று மதியம் 12.30 மணி அளவில் தோழியர் B வித்யா தலைமையில் கூட்டம் நடைபெற்றது மணிகண்டம் ஒன்றிய பொறுப்பாளரும் மாவட்ட பொருளாளருமான தோழர் C செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு வழி நடத்தினார் கூட்டத்தில் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து ஒன்றிய செயலாளர் தோழர் MR முருகன் அவர்கள்  உரையாற்றினார் அஞ்சலி தீர்மானம் முன்மொழிவு பட்டு கூட்டத்தில் தோழர்கள் செல்வகுமார் மருதாம்பாள் ரஜியாபேகம் முருகன் இன்ன சென்ட் விமலா மேரி வித்யா சகுந்தலா ஆகிய நிர்வாகக்குழு உறுப்பினர் கலந்து கொண்டு 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன 

நவம்பர் 7 புரட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் நாளை காலை கொடியேற்றி சோமரசம்போட்டை அலுவலகத்திலும் கொடியேற்றி காலை 10.00 மணி அளவில் திருச்சி மிளகு பாறை அலுவலகத்திலும் பங்கேற்க வேண்டும்

நவம்பர் 9 அன்று அனைத்து கட்சி கிளை செயலாளர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் அந்தநல்லூர் ஒன்றியம் கடியாக்குறிச்சியில் நடைபெற உள்ளது அதில் நாம் அனைவரும் தவறாமல் பங்கேற்பது 

ஜனசக்தி சந்தாவை உடனே துவங்கி உடனே முடித்து மாவட்ட மையத்தில் ஒப்படைப்பது 

2026க்கான உறுப்பினர் சந்தாவை உடனே முடித்து மாவட்ட மையத்தில் ஒப்படைப்பது 

டிசம்பர் 9 அன்று நடைபெறும் கட்டட சங்க ஆர்ப்பாட்டத்தில் நாம் அனைவரும் கலந்து கொள்வது 

இரட்டைவாய்க்காலில் மீண்டும் புதிதாக திறக்க உள்ள தனியார் சாராய மதுபான கடையை நிரந்தரமாக இழுத்து மூட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன 

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன
Previous Post Next Post