முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா புனித கொடி இறக்கத்துடன் நிறைவுப் பெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.. ஒத்துழைப்பு வழங்கிய அணைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி” -தர்ஹா முதன்மை அறங்காவலர் பேச்சு..

முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழா புனித கொடி இறக்கத்துடன் நிறைவுப் பெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.. 
ஒத்துழைப்பு வழங்கிய அணைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி” -தர்ஹா முதன்மை அறங்காவலர் பேச்சு..                                                                       

                    
  
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்க்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் பக்தர்கள் உண்டு என்பதால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப்படும், மேலும் பலர் ஆன்மீக சுற்றுலாவாகவும் வருவதுடன் ஒரு முக்கிய சுற்றுலா தளமாகவும் கருதி அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்லும் ஒரு மத ஒற்றுமைக்கு எடுத்து காட்டான தர்காவாக காட்சி அளிக்கிறது. அதன் பெரியகந்தூரி விழா ஒவ்வெறு வருடமும் சிறப்பாக நடைபெறும். அதில் லட்சகணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் அதுபோல் இந்த ஆண்டின் 724-வது வருட பெரிய கந்தூரி விழா  சென்றமாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நாளான சந்தனக்கூடு நிகழ்ச்சி கடந்த 1-ந் தேதி இரவு துவங்கி 2-ந் தேதி அதிகாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கந்தூரி நிறைவு நாளான இன்று இரவு புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக இரவு 07-மணிக்கு தாவூதியா மஜ்லிஸில் உலக அமைதிக்காக புனித மௌலூது ஷரீபு ஓதப்பட்டு. இரவு 8.00 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் ஜியாரத் முன்னபாக சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்று. அதன் பிறகு 9.00 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் தலைமையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி துவங்கியது. அப்பொழுது தர்கா டிரஸ்டி சாகிப் சிறப்பு  துவா ஓதப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் நாரே தக்பீர்.. நாரே தக்பீர்.. என்ற அராவராத்துடன்; துஆ ஓதப்பட்டு அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் விதவிதமான வாடிக்கைவேடிக்கைகளுடன் புனித கொடி இறக்கப்பட்டது. அப்பொழுது எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹிப் பேசுகையில்: 14நாட்கள் நடைபெற்ற கந்தூரி விழாவிற்கு மதங்கள் கடந்து மனங்கள் சங்கமிக்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அணைத்து தரப்பு மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், 14நாட்களும் விழிப்புடன் பாதுக்காப்பு தந்த காவல்துறைக்கும், நிகழ்ச்சியை உலகறிய செய்த ஊடக துறையினர்களுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நன்கொடை வழங்கிய அணைத்து தரப்பு மக்களுக்கும் எங்களது தர்கா நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு துஆ பிராத்தனை செய்து தப்ரூக் (பிரசாதம்) வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post