மன்னார்குடி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சமுதாயகரை கிராமத்தை சேர்ந்தவர் அபிலேஷ் இவர் தனது வயலில் உரம் தெளித்து வந்தார் அப்போது இடத்திற்கு வந்த. மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்பவர் அபிலேஷ் மீது தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் வால் கொண்டு சரமாரியாக தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார் . இதில் பலத்த காயமடைந்த அபிலேஷை அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு மருத்துவர்கள் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிலேசை அனுப்பி வைத்தனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் அபிலேஷ் உறவினர்கள் குற்றவாளி அஜித்தை கைது செய்யவில்லை எனக் கூறி வாஞ்சூர் என்ற இடத்தில் திடீரென அபிலேஷ் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த பேச்சு வார்த்தையில் குற்றவாளி அஜித்தை மூன்று தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .
Previous Post Next Post