பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் மீதிகுடி ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகர் தலைமை தாங்கினார்.கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே பி கதிரவன் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் மாவட்ட பொருளாளர் அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து பாராட்டி அனைவருக்கும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் ஓட்டுனர் அணி செயலாளர் வெங்கடேசன் இளைஞர் அணி நிர்வாகிகள் மணிமாறன் வினோத் நிதேஷ் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்தனர்
தமிழர் களம் மாத இதழ்
0