கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தை மகளிரணி மாவட்ட தலைவி இந்திராணி ஏற்பாடு செய்திருந்தார், நகர தலைவர் குமார் வரவேற்றார்.
*மாவட்ட தலைவர் க.தமிழ்அழகன் Ex.MLA தலைமை தாங்கினார்,* மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் காயத்ரி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் அகத்தியர் மற்றும் ராகேஷ், பொருளாளர் சீனுசங்கர், மாவட்ட துணை தலைவர்கள் அர்ச்சனா ஈஸ்வர், மாலா, ஐயப்பன்ரவி கண்டன உரையாற்றினார்கள், மாவட்ட செயலாளர்கள் வேல்விழி, சிலம்பரசன், நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதரன், ரகுபதி, அருள் பிரபாகர், KVMS சரவணகுமார், கலைவாணி, மகேஸ்வரி, பகிரதன், சக்திவேல், வினோத் ஆகியோர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.