இராணிப்பேட்டை, நவம்பர் 13:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்ற
ம.மோகனா அவர்களுக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது.
புதிதாகப் பொறுப்பேற்ற
ம. மோகனாவை, இராணிப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகச் சென்று சந்தித்தனர். அப்போது அவருக்குப் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்ற க்ளாடிஸ் சுகுணாவைம் பட்டதாரி ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள் சந்தித்து, பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தனர்.
மேலும், கல்வித் துறை அலுவலர்களான நேர்முக உதவியாளர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் ஆகியோரும் இச்சந்திப்பின்போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் S.P. செளத்திரி, இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் A. ராஜ்குமார், மாவட்டச் செயலாளர் A. சங்கரன், துணைப் பொருளாளர் K. கேசவன், மற்றும் மகளிரணிச் செயலாளர்
M. சுரேஷ்மணி உட்படப் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.