இராணிப்பேட்டை சிப்காட் CSI பள்ளியில் குழந்தைகள் மற்றும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு பேரணி



இராணிப்பேட்டை, சிப்காட் நவம்:14

குழந்தைகள் மற்றும் விளையாட்டு தினத்தை முன்னிட்டு சிப்காட் பகுதியில் இயங்கி வரும் வேலூர் மறை மாவட்டம்   சி.எஸ்.ஐ ஆங்கில மேல்நிலைப் பள்ளியில்  விளையாட்டு தினப் பேரணி நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சிக்கான பேரணியை பேட்மிண்டன் இந்தியாவின் “நட்சத்திர விருது” பெற்ற உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் ஒழுங்கான அணிவகுப்பில், உற்சாகமாக பேரணியில் பங்கேற்றனர்.

மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் எஸ்.ஞானசேகரன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்து கொண்டு  மாணவர்களுக்கு விளையாட்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சில் பள்ளி தாளாளர் டாக்டர் நவீன் பிலிப் தேவகுமாரி, பள்ளி முதல்வர் வேணுகோபால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Previous Post Next Post