திருத்துறைப்பூண்டி அருகே சேறும் சகதியுமாக உள்ள கிராம சாலையை சீரமைத்து தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பாண்டி ஊராட்சியில் இருந்து கட்டிமேடு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பாண்டி கிராமத்திலிருந்து சிவன் கோவில் தெரு, செம்பியமங்கலம்,  ஆதிரங்கம் வழியாக கட்டிமேடு செல்வதற்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது. 




இந்த கிராமங்களில் பகுதிகளில் சுமார் 200கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்வதற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த தார் சாலை மிகவும் பழுதடைந்து தார்கள் எல்லாம் பெயர்ந்து மண் சாலையாக காணப்படுகிறது.


 இந்த  நிலையில் தற்போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சேரும் சகதிகமாக சாலைகள் முழுவதும் காட்சியளிக்கிறது.


இந்த சிவன் கோவில் தெருவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது குறிப்பாக மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கும் பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு செல்வதற்கும், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு  இடங்களுக்கு செல்லக்கூடிய மிகப் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையால் நாள் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு இருந்த வண்ணமாக இருந்து வருகிறது. 


மேலும் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கு செல்லும் பொழுது சாலை முழுவதும் உள்ள சேற்றினால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post