ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டம் - நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில்  மாதாந்திர நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஆற்காடு நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரவர் வார்டுகளில் உள்ள நிறை குறைகளை நகர மன்ற தலைவரிடம் கூறினர். மேலும் நகர மன்ற உறுப்பினர் பொன். ராஜசேகர் ஆற்காடு பேருந்து நிலையம் புதியதாக கட்டப்பட்டு வரும் நிலையில், பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட 100 க்கும் மேற்பட்ட கடைகளை, பழைய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீண்டும் அவர்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மற்ற நகர மன்ற உறுப்பினர்கள், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்றும், பயணிகளுக்கு பயன்படும் வகையில் நிழற்குடை அமைப்பது போன்ற, தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் ஆற்காடு 4 வது வார்டு நித்தியானந்தம் என்பவரை, நியமன உறுப்பினராக தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் நியமன உறுப்பினராக நகர மன்ற தலைவரின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இறுதியாக தேசிய கீதம் பாடி கூட்டம் நிறைவு பெற்றது.
Previous Post Next Post