ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஆற்காட்டில் இந்திய அரசியலமைப்பு சாசனம் புத்தக வடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று நாளை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட பட்டியல் அணித் தலைவர் திரு. M. முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் திரு G. தணிகாசலம், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் திரு G. V. பிரகாஷ், சட்டமன்ற அமைப்பாளர் திரு K. R. குணாநிதி, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் K. ஆனந்தன், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் திருமதி கிருஷ்ணசாந்தி, மாநில எஸ்டி அணி துணைத்தலைவர் திரு சிவராம கார்த்திக் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
. அதனைத் தொடர்ந்து ஆற்காடு மேற்கு மண்டலத் தலைவர் செந்தில்குமார், நகர பொதுச் செயலாளர் சரவணன், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதன் உள்ளிட்ட நகர, மண்டல நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் மூன்று ஆண்டுகள் தீவிரமாக செயல்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, 1949 நவம்பர் 26 ஆம் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு, துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல், சட்ட அமைச்சர் மற்றும் அந்நாள் ஜனாதிபதி சி. ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட தேசிய தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று தருணம் நினைவூட்டப்பட்டது. இந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் விழாக்கள் ஆர்வத்துடன் நடைபெற்று வருகின்றன. அதன்படி ராணிப்பேட்டையிலும் அரசியலமைப்பு தினம் தேசிய மரியாதையுடனும், அரசியலமைப்பு மதிப்புகளை போற்றும் விதத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.