இராணிப்பேட்டை மாவட்டம் SC/ST நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் அரசியலமைப்பின் முக்கியத்துவம், சமத்துவம், சமூக நீதி ஆகியவை குறித்து உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் இந்திய குடியரசு கட்சி,விடுதலை சிறுத்தைகள் கட்சி, BSP, TNBSP உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும், SC/ST நல சங்கங்களின் பசேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பெரும்பாலோர் பங்கேற்றனர்.
SC/ST கூட்டமைப்பின் தலைவர் திரு T. மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் திரு ர. நித்தியானந்தம் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து KBS. மலையராஜன் கூட்டமைப்பு பொருளாளர் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பு திரு விமல் குமார்வ (Ex/SC/ST கூட்டமைப்பு) முன்னெடுத்து நிகழ்வை சிறப்பித்தனர்.