கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ் மன்னார்குடியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா . பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிப்பு ….


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ்    பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில்   18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில்  இந்திய அணியில் ஆண்கள் பிரிவில்  தங்கப்பதக்கம் வென்றார் , தொடர்ந்து வடுவூர் கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ்   தங்கப்பதக்கம்  வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள இவருக்கு   தமிழக அரசு ரூ 25 லட்சம்  வழங்கி பராட்டியது  , அதனைத்தொடர்ந்து அபினேஷ் மோகன்தாஸ்    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  , சமூக ஆர்வலர்கள் , சொந்த ஊர்   கிராம மக்கள்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடியில்   தரணி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  தாளாளர்   எஸ்.காமராஜ்  தலைமையில்  கபடி போட்டியில் வெற்றிபெற்று தங்கபதக்கம் வென்று   இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமைசேர்த்த கபடிவீரர் அபினேஷ் மோகன்தாஸ்க்கு   பள்ளியில்   பாராட்டு விழா நடைபெற்றது இதில்       உற்சாக வரவேற்பு வரவேற்பு அளித்து  பாராட்டு சான்றிதழ்கள் மற்றும்  ரொக்க பரிசு வழங்கபட்டது    அதனை தொடர்ந்து  பள்ளியில் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு  கபடிவீரர் அபினேஷ்  சான்றுகள்  மற்றும் கோப்பைகள் வழங்கி   பாராட்டினார்   
Previous Post Next Post