ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அணி சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் மரியாதையுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. ஓபிசி அணி மாவட்ட தலைவர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட துணைத் தலைவர்கள் நந்தகுமார், அஸ்கர் அலி மாநிலத் துணைத் தலைவர் பத்மநாபன், ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர்.
அரசியலமைப்பின் அடிப்படை சிந்தனைகள் மற்றும் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெ.டி. சீலன் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளின் அர்த்தம், அவற்றின் பாதுகாப்பும் பின்பற்றலும் மக்களின் பொறுப்பாக இருப்பதையும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்பட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்புவிட்டார்.