ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில், திமுக கழகம் சார்பில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆயிலம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசினர் துவக்கப்பள்ளி, M.D. பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வினோத் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவ்விழாவிற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார் இதில் ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார் ஒன்றிய நிர்வாகிகள் கோகுல கிருஷ்ணமூர்த்தி, அமுதா, ஆறுமுகம், சிவா, ஊராட்சி மன்ற தலைவர் தயாளன், சம்பத், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்ரீநாத்,
ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன், வழக்கறிஞர் அணி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு ஆற்காடு மேற்கொண்டியத்தில் உற்சாகமாக அமைந்தது.