ஆற்காடு கிழக்கு ஒன்றியம் சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் எம்.வி. பாண்டுரங்கன் தாஜ்புரா, பழைய மாங்காடு, கேவலூர், முள்ளுவாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
குறிப்பாக இந்நிகழ்வுகளில் ஆர்.கே. விஜய், ஜே. குருமூர்த்தி, கஜபதி, ரமேஷ், கோகுலகிருஷ்ணன், கி. மோகனரங்கன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி சரவணன், மாவட்ட பிரதிநிதிகள், விவசாய அணி தலைவர் தணிகைவேல், கிளைச் செயலாளர் அன்பு, மாவட்ட பிரதிநிதி தாமோதரன், டி. இளங்கோவன், கரிக்கந்தாங்கள் மோகன், பிச்சாண்டி, செந்தாமரை, ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்று ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உதவித்தொகுப்புகள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கே வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
முப்பதுவெட்டியில் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்ற பிரதான விழாவில் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி பாண்டுரங்கம்
சரண்ராஜ், பொன் பழணி, ஜெயபாரதி, தணிகேசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திமுக மாவட்ட அமைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தானார். இந்த விழாவில் ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளைச் செயலாளர்கள், இளைஞரணி, பெண்கள் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.