தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தினர்



 தமிழக முழுவதும் திமுக சார்பில்  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49- வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் தலைமையில் நகர் கழகத்தின் சார்பில் கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Previous Post Next Post