கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா, வெப்பாலம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று. முன்னதாக ஸ்ரீ கருடாழ்வார் மூல மந்த்ர ஹோமம், யாதவ கிருஷ்ணர் மூல மந்த்ர ஹோமம், ஸ்ரீ வராஹமூர்த்தி |மூலமந்த்ர ஹோமம், கிராம தெய்வங்கள் மூலமந்த்ர ஹோமங்கள், நாடி சந்தானம், நேத்ரோ மிலன் பிராண பிரதிஷ்டை, பூர்ணாஹூதி, தீபாராதணை நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்கள் புடைசூழ, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட புனித நீர் கலசங்கள் கோபுரத்தின் உச்சியை அடைந்தது.அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி நூதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கோபுரக் கலசத்தில் இருந்து புனித நீர் தெளிக்கப்பட்டபோது, கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் "கோவிந்தா! கோவிந்தா!" என விண்ணதிர முழக்கமிட்டனர். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த புதிய திருக்கோவிலின் திருப்பணியை மேற்கொண்டு, கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெற பாடுபட்ட வெப்பாலம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினரை அனைவரும் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம்.
தமிழர் களம் மாத இதழ்
0