திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள சாத்தனூர் எனும் கிராமத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வசித்துவரும் பின்தங்கிய கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த இராஜகோபால அய்யர் என்பவர் கிராம மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை தனது சொந்த நிதியில் இருந்து செய்து தந்து வருகிறார். இவர் சாத்தனூர் கிராமத்திற்கு என திருமண மண்படம், 1987ம் ஆண்டு மீனாட்சியம்மாள் என்ற பெயரில் மருத்துவமனை கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படும் வகையில் மருத்துவமனைக்கான கட்டிடம் என பல்வேறு நலத்திட்டங்களை இன்றளவும் தனது குடும்பத்தினரின் பங்களிப்போடு செய்துவருகிறார். தொட்டதெற்கு எல்லாம் அரசை நம்பியே இருப்பதை தவிர்த்து தன்னால் இயன்ற நலத்திட்டங்களை தான் பிறந்த ஊருக்காவது அனைவரும் செய்யமுன்வரவேண்டும் என வலியுறுத்தும் இராஜகோபால அய்யர் குடும்பம், தனது கிராமத்தில் பல ஆண்டுகாலமாக சிதலம் அடைந்து இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவு செய்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை மாவட்ட சுகாதாரபணிகள் இணை இயக்குநர் சங்கீத இன்று மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்துவைத்தார்.
பேட்டி:
1, சங்கீதா இணை இயக்குநர் மருத்துவத்துறை