ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், ஸ்ரீ ஹரிஹர சுதன் பக்த சபா அறக்கட்டளை சார்பில் பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா – ஸ்ரீ ஐயப்பன் திருவிழா நேற்று ஆன்மிக மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
இந்த விழா சபா தலைவர் பி. மார்க்கப்பந்து, ஆலோசகர் கணேசன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் வாசுதேவன், துணைத் தலைவர் வேலுசாமி, துணைச் செயலாளர் வடிவேல், துணைப் பொருளாளர் சங்கரபாணி, துணைப் பொருளாளர் செல்வக்குமார் ஆகியோரின் சிறப்பு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று காலை 7.30 மணிக்கு ஆற்காடு ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் ஸ்ரீ வரசக்தி விநாயகர் அபிஷேக–ஆராதனையுடன் திருவிழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சித்தி விநாயகர் தெருவிலுள்ள கெங்கையம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர் நெல்லரிசி மண்டபத்தில் ஆன்மீக வணிக வளாகம் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஐயப்பன், விநாயகர், முருகர் ஆகியோருக்கு அபிஷேக–ஆராதனையும் நடைபெற்றது.
மாலை 3.00 மணிக்கு ஐயப்பன் சுயசரித நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சித்திஞ்சி சிவகாளி சித்த பீடம் ஸ்ரீ சக்தி மோகானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீக வாழ்த்துரை வழங்கினர்.
மாலை 6.00 மணிக்கு ஐயப்பனுக்கு படிவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் கிருஷ்ணன் குருசாமி கலந்து கொண்டு சிறப்பு தீபாரதனை செய்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
காலை சிற்றுண்டி,
மண்டப நுழைவாயிலில் நீர், மோர், பானகம்,
இரவு 7 மணி முதல் அன்னதானம்
என பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள், ஆன்மீக அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.