மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது




திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  இயங்கும் டயாலிசிஸ் பிரிவுக்கு, கூடுதலாக 10  டயாலிசிஸ் இயந்திரங்கள்,10 கட்டில்கள், 2  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், அதற்கான 2  மின்மோட்டார்கள், 2 குளிர்சாதன இயந்திரங்களை மன்னார்குடி ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்பினர் இணைந்து, உலகளாவிய ரோட்டரி தலைமையகத்திலிருந்து பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.85 லட்சமாகும். மேற்கண்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தையும் இன்று   மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன்னார்குடியில் ரோட்டரி துணை ஆளுநர் வெங்கடேஷ், சென்னை சன் ரைசிங் ரோட்டரி சங்க நிர்வாகி புண்ணியமூர்த்தி, மன்னை ரோட்டரி சங்க தலைவர் சிரில், மிட்டம் ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் ஆகியோர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஜயகுமாரிடம், ரோட்டரி சங்க தலைவர்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நிலைய மருத்துவர் எஸ் கோவிந்தராஜ், மூத்த மருத்துவர் சுரேஷ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலர் பங்கேற்றனர். மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  ஏற்கனவே 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் இயங்கி வருகின்றன இதன் மூலம் 70 நபர்களுக்கு 670 சுற்றுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக கிடைக்கப்பட்டுள்ள 10  டயாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் மேலும் 70 நபர்களுக்கு 670 சுற்றுகள் டயாலிசிஸ் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய டயாலிசிஸ் மையமாக மன்னார்குடி  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post