ஆற்காடு நகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜே.எஸ்.ஆர். ஸ்மைல் இந்தியா பள்ளி சார்பில், ஆற்காடு நகர போலீஸ்சாருடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலத்தில், பள்ளியின் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகள் ஏந்தி, அனைவரும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, பொதுமக்களிடம் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.
இவ்வூர்வலத்தை பள்ளித் தாளாளர் திரு. ஜீவராஜ், முதல்வர் திரு. ஜான் லாரன்ஸ், ஆற்காடு நகர உதவி ஆய்வாளர் திரு. அண்ணாமலை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. லட்சுமணன், ஆய்வாளர் திரு. ரமேஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் தமிழ்நாடு துணிக்கடை வழியாக பயணம் செய்து காலை 11 மணியளவில் நிறைவடைந்தது.
மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
