உசிலம்பட்டி அருகே எழுமலையில் அடுத்த மாதம் நடைபெறும் தமிழ்நாடு ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டிற்கான மூகூர்த்த கால் நடும் விழா மடாதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.,
ராமகிருஷ்ணர் சாரதாதேவி மற்றும் விவேகானந்தர் சுவாமிகளின் பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் மடங்கள் அமைத்து ஆன்மீகத்தை போதித்து வருகின்றன.
32 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாநாடு நடத்துவதை வழக்கமாக கொண்டு இந்த பக்தர்கள் குழு மற்றும் மடாதிபதிகள் இந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் 33 வது பக்தர்கள் மாநாட்டை வரும் டிசம்பர் 26,27,28 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் படி இன்று மாநாட்டிற்கான சென்னை, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், நாட்ராம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மடாதிபதி முன்னிலையில் முகூர்த்த கால் நடும் பணி விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அனைத்து மடாதிபதிகளும் மூகூர்த்த கால் ஊன்றினர்.
ஆயிரக்கணக்கான ராமகிருஷ்ணர் -சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தரின் பக்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என தகவல் தெரிவித்தனர்.
பேட்டி : சத்திய ஞானானந்தர் ( மடாதிபதி)