உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.!
தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் சார்பாக போதை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
அரசு கள்ளர் பள்ளியில் தொடங்கும் முன் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகளை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சூரிய திலகராணி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை மதுவிலக்கு ஆய்வாளர் சூரிய திலகராணி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலமானது பள்ளியில் தொடங்கி கம்பம் நகரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் மதுவிலக்கு காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டி. காவல் ஆய்வாளர் சூரிய திலகராணி