தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விவசாய அணி தலைமை சார்பாக அரசு மருத்துவமனையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் விவசாய அணி சார்பில், வி.பி. சுரேஷ்பாபு ஏற்பாட்டில் தைலாபுரம் அரசு மருத்துவமனையில் 22 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர கை மிதிவண்டி, அரசு மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், மருந்துகளை பதப்படுத்த குளிர்சாதன பெட்டி, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 300 பேருக்கு சத்து மாவு, துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் ஜி.பி.சுரேஷ், தலைமை ஏற்று பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக கழக கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் பிரவீன் ராஜ், கபாலி, விஜயகுமார், ஐயப்பன், தினேஷ், துரைமுருகன், முருகதாஸ், பிரகாஷ், புருஷோத்தமன், அரவிந்த், அருணகிரி, ஒன்றிய நிர்வாகிகள் சிவா, புண்ணியகோடி, குமரவேல், ராஜா, சத்தியா, கார்த்திக், சசி, கோபால், இளங்கோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.