சின்னமனூர் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் முனைவர் மனோகரன் அவர்கள் எழுதிய தல வரலாறு வெளியிட்டு விழா நடைபெற்றது.!

 சின்னமனூர் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் முனைவர் மனோகரன் அவர்கள் எழுதிய தல வரலாறு வெளியிட்டு விழா நடைபெற்றது.!


தேனி மாவட்டம் சின்னமனூர் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் மண்டபத்தில் முனைவர் மனோகரன் அவர்கள் எழுதிய தல வரலாறு வெளியிட்டு விழா நடைபெற்றது. 




முதலாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடி விழா தொடங்கியது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ந.ராமகிருஷ்ணன் தல வரலாறு நூலை வெளியிட திமுக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மனோகரன் பெற்றுக் கொண்டார்.


பின்னர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு, பாசம், கோபம், கொடை, வீரம் , விவேகம், வெற்றி , தோல்வி ,  காதல், காமம் என அனைத்து உணர்வுகளும் அடங்கும் வாழ்வியல் முறைகளை ஒருங்கே அமைந்த இடம் தான் கோவில் என பேசினார்.



 சின்னமனூர் செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் திருக்கோவில் தல வரலாற்று கருத்துக்களை உண்மைத் தன்மையை பல நூல்களை திரட்டி புனைய பெற்ற தல வரலாறு நூலை எழுதிய இரா.மனோகரன் அவர்களை வாழ்த்தினார்.


இந்த நூல் வெளியீட்டு விழாவில் செயல் அலுவலர் நதியா வரவேற்பு உரையாற்றினார், பின்னர் நகராட்சி ஆணையாளர் நகராட்சி சேர்மன் அய்யம்மாள் ராமு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....



                                  மாவட்ட செய்தியாளர் மோகன்


Previous Post Next Post