பத்திரிகையாளர்களுக்கு பஸ் பாஸ் வழங்க காலதாமதம், கட்டுப்பாடு
பி ஆர் ஓ அட்டகாசம் அனைத்து பத்திரிகையாளர்கள்
கலெக்டரிடம் மனு
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பாரூக்பாஷா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது எங்கள் சங்கத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சிலர் சிறு பத்திரிக்கைகளிலும், சிலர் பெரிய பத்திரிக்கைகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அறுவலராக பணி செய்து வரும் அசோக்குமார் என்பவர் பத்திரிக்கைகளை சிறு பத்திரிக்கைகள், பெரிய பத்திரிக்கைகள் என்று தரம் பிரிக்கிறார். சில பத்திரிக்கைகள் பஸ் மூலமாகவும், சில பத்திரிக்கைகள் கொரியர் மூலமாகவும் வந்து சேருகின்றன. இந்நிலையில் 11 மணிக்குள் பத்திரிக்கைகளை அலுவலகத்தில் தர வேண்டும் என்று புதிய நிபந்தனை விதிக்கிறார். மேலும் பத்திரிக்கைகளை வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யாமல் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கிறார். பதிவேட்டில் ஏன் பதிவு செய்யவில்லை என்று கேட்டால், நாங்கள் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்தால் அரசு சலுகைகளை கேட்பீர்கள். நான் இருக்கும் வரை உங்களுக்கு எந்த அரசு சலுகைகளும் கிடைக்க விடமாட்டேன் என்கிறார். மேலும் இவருக்கு முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அதிகாரத்துடனும், ஆணவத்தோடும் பேசுகிறார்.
பத்திரிக்கையாளர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான பேருந்து பயண அட்டை புதுப்பித்து தருவதற்கும், புதிய பயண அட்டை தறுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர். 2025-ஆம் ஆண்டு துவங்கி 5 மாதங்கள் கடந்த நிலையில் பேருந்து அட்டை புதுப்பித்து தராமலும், புதிய பேருந்து அட்டை வழங்காமலும் காலதாமதம் செய்து வருகிறார். அவரிடம் கேட்டால் உங்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்கமாட்டேன், உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள். எனக்கு எல்லா இடத்திலும் ஆட்கள் இருக்கின்றனர். என்னை ஒன்றும் செய்ய முடியாது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் என்னிடம் கேள்வி கேட்டாலும், அதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியும். உங்களாய் ஆனதை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். இவரிடம் கடந்த 23-04-2025 அன்று பஸ்பாஸ் வழங்குவதற்கு சங்கம் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. எனவே கணம் அம்மா அவர்கள் இவர் மீது நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்களுக்கு அரசு சலுகைகள் உள்ளிட்ட பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.