தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை வழங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தேனி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றிய மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன்.
மோடியை கண்டித்து நாளொரு மேடை பொழுதொரு வண்ணம் நடிப்பவன் மனிதன் அல்ல என்ற எம்ஜிஆர் சினிமா பாடல் பாடி மக்களை கவர்ந்தார்.
இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை நொறுக்கி இருக்கிகிறது மோடி தலைமையிலான பிஜேபி மத்திய அரசு.
இந்திய அரசியல் வரலாற்றில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏழாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது திமுக அரசு என பேசினார்.
மேலும் திமுக அரசின் நான்கு ஆண்டுகால பல்வேறு மக்கள் நலத்திட்ட சாதனைகளையும் பொதுக்கூட்டத்தில் விளக்கி கூறப்பட்டது.
பொதுகூட்டத்தில் முத்தாய்ப்பாக எம்ஜிஆர் சினிமா படப்பாடலை மோடியை ஒப்பிட்டு பாடல் வரிகளுடன் மோடி மோடி என்று ஒவ்வொரு வரிகளும் சேர்த்துக்கொண்டு திமுக பேச்சாளர் பாடியது கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை கலகலப்பாகியது.
கூட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்......