நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.







அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா ( பொறுப்பு ) தலைமை வகித்தார்.

வரவேற்புரை விடியல் பிரகாஷ்

முன்னிலை பரமன் பாண்டியன், பஞ்சாலை சண்முகம் அவர்கள்.

போதையால் அழிந்து வரும் சமுதாயத்தை காக்க பல்வேறு போட்டிகள் வைத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவருக்கு காவல்துறை ஆய்வாளர் தவமணி அவர்கள் பரிசளித்து போதையின் தீமைகளைப் பற்றி விரிவாக மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.

இந்த காலத்திலும் போதைக்கு அடிமையாக மாட்டோம் என்று மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

பேச்சு போட்டியில் மாணவி மாணவிகள் பேசும் பொழுது போதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகளை விரிவாக பேசினார்கள் மேலும் போதையால் ஏற்படும் இன்னல்களைப் பற்றி பேசினார்கள்.

இந்நிகழ்வில் சின்னப்ப நாயக்கன்பாளையம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, மற்றும் நாராயண நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, ஆசிரிய பெருமக்கள் ஜெயந்தி, ரதி, பாலசுந்தரம், சசிகலா, ஷிவானி, மேகலா, சசிகலா, மற்றும் சௌந்தர், பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Previous Post Next Post