தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம்

10.06.24
FILE NAME: TWO WHEELER ACCIDENT NEWS.
THENI DISTRICT REPORTER: R.RAJA 9655331932.


தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம் அடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.!!
தேனி மாவட்டம்  உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஈஸ்வரன் (35) இவர் ஜேசிபி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார், இவர் தற்சமயம் குடும்பத்துடன் கம்பம் நந்தனார் காலனி பகுதியில் வசித்து வருகிறார். இன்று தனது சொந்த ஊரான ராயப்பன்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் கம்பத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்து உள்ளார். அப்போது காமய கவுண்டன்பட்டியில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் எதிரே இரு சக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இதில் ஈஸ்வரன் உட்பட நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நால்வரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வந்துள்ளனர். 

அப்போது ஈஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்ற மூவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த ஈஸ்வரனின் உடலை ராயப்பன்பட்டி காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர். 

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காயமடைந்த மூவர் குறித்து விசாரணமே கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் ராயப்பன்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது 

இந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....
Previous Post Next Post