மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியை அடுத்துள்ள அருகே சாலையை கடக்க முயன்ற டிராவல்ஸ் வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியை அடுத்துள்ள பிரவியம்பட்டியைச் சேர்ந்த சிவராமன், சுதாகரன் ஆகியோரின் உறவினர் திருமங்கலம் அருகே உரப்பனூரில் இறந்துள்ளார்., இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள கொடிக்குளம் - பிரவியம்பட்டியிலிருந்து 23 பேர் வேனில் சென்றுள்ளனர்., பின்னர் துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, செல்லம்பட்டியில் சாலையை கடக்க முயன்ற இந்த டிராவல்ஸ் வேன் மீது தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் அருகே உள்ள கடைக்குள் புகுந்து கடை மற்றும் கடை முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்களை சேதம் ஏற்பட்டது.,
இதில் வேனில் பயணித்து வந்த பிரவியம்பட்டியைச் சேர்ந்த மலையாண்டி, பாபு, செல்லம், பாண்டியம்மாள், கணேசன், பாண்டி, சுந்தரபாண்டி மற்றும் தனியார் பேருந்தில் பயணித்து வந்த போடியைச் சேர்ந்த மீனாகுமாரி உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவமறிந்து விரைந்து வந்த வாலாந்தூர் காவல் நிலையம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.