தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்கச் செயினை பறிமுதல் செய்துள்ளனர்.!!

10.06.24
FILE NAME: CUMBUM  RABBARY NEWS.
THENI DISTRICT REPORTER: R.RAJA 9655331932.


தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்கச் செயினை பறிமுதல் செய்துள்ளனர்.!!
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்திற்கு  பின்புறம் பென்னிகுக் நகரைச் சேர்ந்தவர் விசாலினி. இவர் தனியார் வங்கி மேனேஜராக உள்ளார்.
இவர் கடந்த 5 ம்தேதி காலை வீட்டில் முன்பு வாசல் தெளிப்பதற்காக அருகில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடித்து கொண்டு நடந்து வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் விசாலினி கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்தான்.

விசாலினி செயினை இறுக்கி பிடித்து கொண்டதால், செயினில் இருந்த அரை பவுன் தங்க டாலரை மட்டும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டான். இது குறித்து விசாலினி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற திருடன் புகைப்படம் சரியாக தெரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த புகைப்படத்தை தனியார் ஸ்டுடியோவில் கொடுத்து உத்தேச படம் வரைந்து அந்த உருவத்தை வைத்து குற்றவாளியை காவல் துறைனர் தேடி வந்தனர்.

அப்போது கம்பத்தில் உள்ள கயிறு தொழிற்சாலையில் அந்த குற்றவாளி வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குற்றவாளி கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுபாஷ் (26) என்பதும், மேனேஜர் விஷாலினி கழுத்தில் இருந்த தங்க டாலரை பறித்து சென்றதும் தெரியவந்தது. 

இதையடுத்து தங்கடாலரை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post