தேனி மாவட்டம் கூடலூர் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.!!

10.06.24
FILE NAME: SITHI VINAYAKAR KUDAMULAKKU NEWS.
THENI DISTRICT REPORTER: R.RAJA 9655331932.


தேனி மாவட்டம் கூடலூர் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.!!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள கருநாக்கமுத்தன் பட்டியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. 

இத்திருக்கோவிலில்  நேற்று கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழாவினை தொடங்கினார்கள். 

இன்று விழாவின் முக்கிய நிகழ்வான கலச கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது. 
இந்த விழாவில் விமான கோபுர கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் மீது புனித நீரினை தெளித்தனர்.

 அதனைத் தொடர்ந்து கருவூலத்தில் இருந்த சித்தி விநாயகருக்கு பால் அபிஷேகம், நெய் அபிஷேகம் சந்தன அபிஷேகம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக வழங்கினார்கள்.
Previous Post Next Post