செய்தி நிகழ்வு இடம்: பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 101வது பிறந்தநாளினை முன்னிட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 200 உள் நோயாளிகள் மற்றும் ECRC மையத்தில் சிகிச்சை பெற்று வரும் 60 மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது....*
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றவரும் 200 நபர்களுக்கும் , EcRC எனப்படும் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் 60 நபர்களுக்கும் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ் ஏற்பாட்டில் காலை உணவு வழங்கப்பட்டது .
இதனை திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் கலந்துகொண்டு அனைவருக்கும் காலை உணவினை வழங்கினார்.உடன் இணை இயக்குனர் (மருத்துவம் ,ஊரக மற்றும் குடும்ப நலம்) ரமேஷ் பாபு , மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் , பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் , மருத்துவர்கள் ,
செவிலியர்கள் ,திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.....