நீடாமங்கலம் நீலன் அறக்கட்டளை சார்பில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா 5 ஆயிரம் ஊக்கதொகையை நிறுவனர் நீலன் அசோகன் வழங்கினார்.

நீடாமங்கலம் நீலன் அறக்கட்டளை சார்பில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தலா 5 ஆயிரம் ஊக்கதொகையை நிறுவனர் நீலன் அசோகன் வழங்கினார்.   
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் நீலன் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி மற்றும் நீலன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் இந்தாண்டு அரசு பள்ளிகளில் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற 12 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ 1லட்சம் ரொக்க தொகையை நீலன் அறக்கட்டளை சார்பில் ஊக்க தொகையை பள்ளியின் தாளாளர் நீலன் அசோகன் வழங்கினார்.  மேலும் நீடாமங்கலம் நீலன் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர் , இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் , பெற்றோர்கள் உள்ளீட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post