மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில்கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள் - உசிலம்பட்டியில் புதிதாக பள்ளிக்கு வந்த மழலைகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

உசிலம்பட்டி
 10.06.2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில்
கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள் - உசிலம்பட்டியில் புதிதாக பள்ளிக்கு வந்த மழலைகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று முதல் துவங்கியுள்ளது., மாணவ மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு வந்துள்ள சூழலில்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இன்று பள்ளி திறக்கப்படதும் பள்ளிக்கு வருகை தந்தனர்., 

பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் மதன் பிரபு தலைமையிலான ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் முன் நின்று மாணவ மாணவிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.,

இதே போன்று இன்று புதிதாக பள்ளியில் சேர பெற்றோர்களுடன் வந்த மழலைகளுக்கும் பூ மற்றும் இனிப்பு வழங்கி கை தட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்து பள்ளிக்குள் அழைத்து சென்றனர்.
Previous Post Next Post