தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேச்சு

அதிமுக கட்சி தொடங்கி 52 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவினர் பேரணியாக சென்று கோபாலசமுத்திரம் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில் தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத மாபெரும் இயக்கம் அதிமுக தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் , அதை போல வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அதிமுக பெரும் வாரியான இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்தார் . இந்த நிகழ்சியில் நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் , ஒன்றிய செயலாளர் தமிழ் செல்வன் . உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
Previous Post Next Post