தமிழர்களத்தின் பொங்கல் வாழ்த்து

தமிழர்களத்தின் பொங்கல் வாழ்த்து


பொங்கலோ .... பொங்கல் ... 
இது தமிழ் பொங்கல்..
தமிழனின் பொங்கல்....
தமிழ் மண்ணின் பொங்கல்....

காலை கதிரவன் பார்வையில்

காளையையும் - பசுவையும்
தொலுவில் இருந்து எழுப்பி-தும்பை 
கழட்டிதும்.  ம்மா........என துள்ளிக் குதித்து

கட்டுத்துறையில் இருந்துகாட்டை நோக்கி மேய்ச்சலுக்கு செல்லும் அழகே... அழகு


கையில் கஞ்சிக்கலையம்.....
தொட்டுக்க மட்டை ஊறுகாய்.....
கையில் கம்பு - தலையில் 
உருமா கட்டுடன் மகிழ்ச்சியோடு பின் செல்லும் தமிழ்மகனின் நடையழகு.....


குடும்பத்தின் அங்கமாய்
பாசத்தின் பினைப்பாய்
ஒன்றிவாழும் கால்நடையை நன்றியோடு...

கழுவி - குளிப்பாட்டி- வண்ணப்பொடியால் அலங்கரித்து-

மங்கலம் உண்டாக்கும்
மஞ்சளை செடியுடன் கழுத்தில் கட்டி- மாலை-மணி அணிவித்து......

கொம்பைசீவி. கூர்தீட்டி.. மந்தைக்கு கொண்டு செல்ல தயாரான செல்லப்பிராணி.....

வாசலைகூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளித்து. கோலம்மிட்டு
வாசல் முற்றத்தில் செங்கரும்பை நிறுத்தி..

விறகுஅடுப்பு மூட்டி 
புதுமண்பானையில்
பச்சரிசி பொங்கல் வைத்து.....கொலவி போட்டு கும்மியடித்துமகிழும் தமிழ் மங்கையரின் மகிழ்ந்த நான்னாளம்....


கண்ணியரின் காதல் பார்வை படாத என....
காளைகளை அடக்கும் களத்தில் வீரமிகுந்த வாலிபர்களின் தீரமான நன்னாளாம்.....


ஊரே மகிழ... உறவுகள் ஒன்றுகூடி..ஒரே குரளில் பொங்கலோ ..... பொங்கல்... மாட்டுப்பொங்கல்.....
தைப்பொங்கல்......
மகிழ்ச்சி பொங்கல்...என
மகிழ்ச்சி கொண்டாடும் தமிழனின் திருநாளாம்-பொங்கல் திருநாள்....



தேனிஎம்.சேதுராமன்
Previous Post Next Post