தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினார்கள்....
13.01.2023
ஆவணம்;2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் SMS.காசிம் கொடியசைத்து துவக்கி வைத்தார்,பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் தைப்பொங்கலுக்கு முன்பு கொண்டாடப்படும் போகி பண்டிகையின் போது நெகிழிப்பை மற்றும் ரப்பர் டயர் போன்ற பொருட்களை எரித்து காற்று மாசுபடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் விழிப்புணர்வு ஊர்வலத்தை நகரின் முக்கிய வீதிகளில் நடத்தினார்கள்.
பள்ளியைச் சேர்ந்த சாரணர் இயக்க மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் மாணவர்கள் தனித்துவ உடைய அணிந்து ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மாணவர்களின் ஊர்வலத்தை பொதுமக்கள் வரவேற்புடன் கண்டுகளித்தனர்.