அனுமந்தன் பட்டியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் உடைப்பு பதற்றம் போலீசார் குவிப்பு.
11.01.2023
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த அனுமந்தன்பட்டியில் 7வது வார்டில் செபஸ்தியார் திடல் அமைந்துள்ளது. தெரு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு செபஸ்தியார் சிற்றாலயம் கட்டி இப்பகுதி கிறிஸ்தவ பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 8.1.2023அன்று இதனை அருளானந்தர் என்பவர் இக்கோவில் அமைந்துள்ள இடம் எனக்கு சொந்தமான இடம் எனக்கூறி கிறிஸ்தவ பொதுமக்கள் வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தி வந்த செபஸ்தியார் குடிலை உடைத்து சேதப்படுத்தினார் அருளானந்தர் குடும்பத்தினரை கைது செய்ய கோரியும் சேதப்படுத்தப்பட்ட சிற்றாளயத்தினை சீரமைக்க கோரி உத்தமபாளையம் காவல்நிலையத்தில் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் அவரை காவல் துறை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. தற்போது நேற்று இரவு செபஸ்தியார் திடல் மற்றொரு குடில் சவரியார் சிலை உடைப்பு இதை யார் உடைத்தது என தெரியவில்லை. உடனடியாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அனைத்து கிறிஸ்தவ பொதுமக்கள் ஒன்று கூடினர் உத்தமபாளையம் காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர் சிலையை உடைத்தது யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அருளானந்தர் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அனுமந்தன் பட்டியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் இரண்டாவது சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடாது வகையில் போலீசார் அனுமந்தன்பட்டி பகுதியில் போலீஸார் குவிப்பு.